நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் இன்று (2022 மார்ச் 09) ஓய்வு பெற்றார்.

09 Mar 2022

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன இன்று (2022 மார்ச் 08) திருகோணமலையில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

08 Mar 2022

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இன்று (2022 மார்ச் 08) தலைமன்னாரில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

08 Mar 2022

மரைன் படைப் பிரிவுடன் இனைந்து பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.

மரைன் படைப் பிரிவுடன் இனைந்து வெற்றிகரமாக பயிற்சியை நிரைவு செய்த 07 வது ஆட்சேர்ப்பின் 04 அதிகாரிகள் மற்றும் 22 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 மார்ச் 04 ஆம் திகதி சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் தலைமையில் திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

05 Mar 2022

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான (Minesweeper Division One) இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' ‘URAGA’ மற்றும் 'ஹிராடோ' ‘HIRADO’ ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளது.

02 Mar 2022

கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவுற்றது

பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.

27 Feb 2022

இலங்கை கடற்படைத் தளபதி பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசியை (M Amjad Khan Niazi) பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் 2022 பெப்ரவரி 22 ஆம் திகதி சந்தித்தார்.

23 Feb 2022

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு- 2022 வெற்றிகரமான குறிப்பில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports-CISM ) மராத்தான் போட்டி நிகழ்வு – 2022 பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் முப்படைத் தளபதிகளின் வருகையுடன் இன்று (2022 பெப்ரவரி 20) கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

20 Feb 2022

ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவின் உலகளாவிய நலன்கள் கிளையின் உதவிச் செயலாளர் திரு டொம் மெனடிவு அவர்கள் (Tom Menadue) இன்று (2022 பெப்ரவரி 18) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

18 Feb 2022

கொழும்பு கடற்படை பயிற்சி 2022 (CONEX - 22) வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படை வீரர்களின் தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் நடைமுறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise - 2022 – CONEX - 22) - 2022 பெப்ரவரி 14 ஆம் திகதி வெற்றிகரமாக நிரைவடைந்தது.

15 Feb 2022