நிகழ்வு-செய்தி

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட மேம்பாட்டுத் திட்டமான ‘ஹரித தெயக்’ - 2022 கடற்படையில் செயல்படுத்தப்பட்டது

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டமான ‘ஹரித தெயக்’ – 2022 உடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 மார்ச் 29) கடற்படைத் தலைமையகத்தில் மரக்கன்றுகளை நட்டு இலங்கை கடற்படையில் தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

29 Mar 2022

பானம அரசு தமிழ் பாடசாலைக்கு கடற்படையினரால் கணினியொன்று வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பானம அரசு தமிழ் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி ஒன்று அன்பளிப்பு தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மகிந்த மஹவத்தவின் தலைமையில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்றது.

28 Mar 2022

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி மேற்கு கடலில் நடைபெறவுள்ளது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி 2022 மார்ச் 26 ஆம் திகதி கொழும்பு கடற்பரப்பில் தொடங்கி 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

27 Mar 2022

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்தின் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்திற்கு (Information Fusion Centre - Colombo) கடல்சார் தகவல் சேகரிப்பு மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் (MDA Equipment) உத்தியோகபூர்வமாக கையளிப்பு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களின் தலைமையில் இன்று (2022 மார்ச் 25) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

25 Mar 2022

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான பணியாளர் கலந்துரையாடல் மற்றும் கூட்டு கடல்சார் கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி நிறைவடைந்தது.

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் கடற்படை தலைமையகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி (03rd Navy to Navy Staff Talks SLN – USN) 2022 மார்ச் 23, அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது.

24 Mar 2022

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ராபர்ட் டி. கிளார்க் (Reserve Deputy Commander, Seventh Fleet Rear Admiral Robert T. Clark) தலைமையிலான அமெரிக்கக் கடற்படைக் குழு இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தனர்.

21 Mar 2022

கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் எல் பி வஃபுலா அவர்கள் (Colonel L P WAFULA) இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

21 Mar 2022

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் பூஜை பூமி சன்னஸ் பத்திரம் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண பண்டைய நயினாதீவு ராஜமஹா விஹாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2022 மார்ச் 19 ஆம் திகதி நயினாதீவு பண்டைய ரஜமஹா விகாரையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.

20 Mar 2022

பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படையின் உதவி

யாழ்ப்பாணம், பலைதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2022 மார்ச் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

20 Mar 2022

இலங்கை கடற்படை வீரர்களுக்காக இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் முலம் நடத்தப்பட்ட பயிற்சி திட்டம் நிறைவு

இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் 2022 மார்ச் 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துடன் குறித்த படகுகள் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்காக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இன்று (2022 மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

16 Mar 2022