நிகழ்வு-செய்தி

ரிம் ஒப் த பெசிபிக் - 2022 (RIMPAC) பலதரப்பு கடல்சார் பயிற்சிக்காக கடற்படை குழுவொன்று தீவை விட்டு வெளியேறியது

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல் குழுவால் (US Pacific Fleet) நடத்தப்படும் Rim of the Pacific 2022 (RIMPAC 2022) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க 50 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய இலங்கை கடற்படைக் குழு இன்று காலை (ஜூன் 04, 2022) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. அங்கு ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கென்பரா (HMAS Canberra) கப்பலின் உறுப்பினர்களுடன் இனைந்து இலங்கை கடற்படை மரைன் படையணி இரண்டு வார பயிற்சியின் பின்னர் அமெரிக்கா, ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் RIMPAC 2022 கடல்சார் பயிற்சியில் பங்கேற்கும்.

04 Jun 2022

கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் மற்றும் கலேவெல, இஹல திக்கல ஆரம்பக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2022 ஜூன் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூன் 03) பாடசாலை மாணவர்களின் மற்றும் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

03 Jun 2022

கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 30 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 30 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2022 மே 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.

28 May 2022

மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகள் உள்ளடக்கி கடற்படையினரால் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று மே 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

25 May 2022

கடற்படையினரால் வடக்கு கடற்கரையில் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்டைதீவு மற்றும் யாழ்ப்பாணம் பொன்னாலைக் கலப்பின் கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று வடக்கு கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் 2022 மே 20 ஆம் திகதி நடைபெற்றது.

20 May 2022

தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

2022 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2022 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

19 May 2022

13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு 2084 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனுமதிக்கமைய 74 கடற்படை அதிகாரிகள் மற்றும் 2010 கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் அடுத்த தரநிலை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

19 May 2022

கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை பூர்த்தி செய்த 16 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் 18வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த தொழில்நுட்ப பிரிவில் 16 மாலுமிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2022 மே 11) வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

11 May 2022

ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படையில் 34 வருட கால சேவையை முடித்து இன்று (மே 04, 2022) கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார்.

04 May 2022

கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்ததான முகாம் 2022 ஏப்ரல் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

01 May 2022