நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் காலி கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஆகஸ்ட் 03 ஆம் திகதி காலி கடற்படை தளத்தில் இருந்து காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை நகர எல்லை வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

04 Aug 2024

கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் புதுப்பிக்கப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதான வளாகத்தில் நடைபெற்றது.

03 Aug 2024

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவிச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்தனர்

அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவி செயலாளர் திருமதி Karen Radford, 2024 ஜூலை 30ஆம் திகதி கொழும்பு டொரிங்டனில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ திரு.பிரமித பண்டார தென்னகோனை அவர்களைச் சந்தித்தார்.

02 Aug 2024

இந்திய கடற்படையின் ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 02,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

02 Aug 2024

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவி செயலாளர் கடற்படை தளபதியை சந்தித்தார்

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் உதவிச் செயலாளர் திருமதி Karen Radford அவர்கள் இன்று (2024 ஆகஸ்ட் 01) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

01 Aug 2024

கடற்படை மூலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் இரத்தக்கூழ்மப்பகுப்பு பிரிவில் மருத்துவ தர நீர் சுத்திகருப்பு இயந்திரமொன்றை நிறுவப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று (01) 2024 ஜூலை மாதம் 31 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் இரத்தக்கூழ்மப்பகுப்பு பிரிவில் நிறுவப்பட்டது.

01 Aug 2024

ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 33 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க இன்று (2024 ஜூலை 30,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

30 Jul 2024

கடற்படையின் பங்களிப்புடன் அனுராதபுரம் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தில் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2024 ஜூலை 28) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

29 Jul 2024

வடமேற்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக கொமடோர் தம்மிக்க விஜேவர்தன பொறுப்பேற்றார்

வடமேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கொமடோர் தம்மிக்க விஜேவர்தன இன்று (2024 ஜூலை 27,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

27 Jul 2024

கடற்படையினரின் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித்திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தில் பலுகஸ்வெவ மற்றும் கெக்கிராவ பகுதிகளில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 ஜூலை 26 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

27 Jul 2024