நிகழ்வு-செய்தி

பலுகஸ்வெவ மைத்திரிகம பகுதியில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக அனுராதபுரம், பலுகஸ்வெவ, மைத்திரிகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜூலை 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

25 Jul 2022

திருகோணமலை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு பாதுகாப்பு செயலாளர் அஞ்சலி செலுத்தினார்

திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்பாக போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று காலை (2022 ஜூலை 23) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றதுடன் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் போர்வீரர் நினைவுத்தூபிக்கு மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

23 Jul 2022

வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

23 Jul 2022

இலங்கையின் புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி. நெல்சன் (Lieutenant Colonel Anthony C. Nelson), மற்றும் தற்போது குறித்த பதவியில் பணியாற்றி வருகின்ற லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் (Lieutenant Colonel Travis Cox) ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். அங்கு லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் அவர்களை அன்புடன் கடற்படைத் தளபதி வரவேற்றார்.

19 Jul 2022

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் பத்தாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் (Bi- Annual Navy Journal) பத்தாவது பதிப்பு இன்று (2022 ஜூலை 15) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் அருன விஜயவர்தனவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

15 Jul 2022

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் இன்று (2022 ஜூலை 12) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

12 Jul 2022

கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நியமனக் கடிதத்தை கையளிக்கப்பட்டது.

12 Jul 2022

கடற்படையின் புதிய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

12 Jul 2022

ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2022 ஜூலை 09) ஓய்வு பெற்றார்.

09 Jul 2022

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி டான்யா கொங்கிரிப் அவர்கள் (Mrs. Tanja Gonggrijp) இன்று (2022 ஜூலை 08) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

08 Jul 2022