நிகழ்வு-செய்தி
புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 டிசெம்பர் 28) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.
29 Dec 2022
ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா இன்று (2022 டிசம்பர் 23) ஓய்வு பெற்றார்.
23 Dec 2022
ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற நத்தார் கரோல் பாடல் நிகழ்வு வண்ணமாக்க கடற்படையினரின் பங்களிப்பு
இலங்கை சுற்றுலா அமைச்சு, முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் கரோல் பாடல் நிகழ்வு 2022 டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக ஆரம்பமானதுடன் கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார நடனக் குழு 2022 டிசம்பர் 21 அன்று மாலை தனது பங்களிப்பை வழங்கியது.
23 Dec 2022
Combat ’ 2022 கண்காட்சியுடன் கடற்படை இணைகிறது
பாடசாலை மாணவர்களிடையே சாரணர் இயக்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் கொழும்பு றோயல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட Combat ’ 2022 கண்காட்சி 2022 டிசம்பர் 20 ஆம் திகதி குறித்த கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் கடற்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் கடற்படை வீரர்களால் வழங்கப்பட்ட செயல்விளக்கங்கள் இடம்பெற்றன.
21 Dec 2022
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 19) இடம்பெற்றது.
20 Dec 2022
புதிய கடற்படைத் தளபதி கௌரவ ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 டிசம்பர் 19) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
20 Dec 2022
இலங்கை கடற்படை கலாசார இசைப் பிரிவின் நடன மற்றும் தாள வாத்தியம் இசை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது
இலங்கை கடற்படையின் கலாசார இசைக்குழுவினால் வழங்கப்பட்ட வண்ணமயமான நடன மற்றும் தாள வாத்திய நிகழ்ச்சி 2022 நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பு 07, ராயல் மாஸ் எரீனா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
05 Dec 2022
72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது
2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
02 Dec 2022
72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது
2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் நடைபெற்றது.
02 Dec 2022
நாகதேவன்துறை கடற்படை முகாம் பாதுகாக்கும் நடவடிக்கையின் போது மற்றும் பூநகரியில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தானம் வழங்கப்பட்டது
1993 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகத்தேவன்துறை கடற்படை முகாமை மற்றும் பூநகரி கடற்படை முகாமை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் போது உயிரிழந்த 114 கடற்படை வீர்ர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2022 நவம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாகத்தேவன்துறை கடற்படை முகாமில் இடம்பெற்றன.
17 Nov 2022