நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க இன்று (2024 நவம்பர் 09) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
09 Nov 2024
இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கை கடலோரக் காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட, ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க இன்று (2024 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
09 Nov 2024
ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன கடற்படை பயிற்சிகள் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்
ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, கடற்படை பயிற்சிகள் பணிப்பாளர் நாயகமாக இன்று (2024 நவம்பர் 08) கடற்படைத் தலைமையக, பயிற்சி பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
08 Nov 2024
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் கௌரவ Semih Lütfü Turgut அவர்கள் இன்று (2024 நவம்பர் 07) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
07 Nov 2024
'விருசிசு பிரதீப' புலமைப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது
தேசிய பாதுகாப்பு நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில்களை அடையாளமாக வழங்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 07) பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரணவின் தலைமையில் இடம்பெற்றது.
07 Nov 2024
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 34 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 34 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம், 2024 நவம்பர் 06 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகு கப்பலில் காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
06 Nov 2024
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) இன்று (2024 நவம்பர் (06) தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு, கடற்படை தளபதியை சந்தித்த பின்னர், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordinating Centre, Colombo - MRCC) தகவல் இணைவு மையம் (Information Fusion Centre - IFC) நடவடிக்கைகளை அவதானித்த பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு உரை நிகழ்த்தினார்.
06 Nov 2024
ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்
34 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 நவம்பர் 05) ஓய்வு பெற்றார்.
05 Nov 2024
ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் இன்று (2024 நவம்பர் 05,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
05 Nov 2024
வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினண்ட்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்
வடமேற்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ் இன்று (2024 நவம்பர் 04) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
04 Nov 2024