நிகழ்வு-செய்தி
இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமார் பாரூக் புர்கி (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மார்ச் 09) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
09 Mar 2023
‘சயுருசர’ வின் 46 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 46வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் லெப்டினன்ட் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2023 மார்ச் 08) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.
08 Mar 2023
திருகோணமலை அபேபுர பகுதியில் சமூக கண் சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமொன்று கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது
திருகோணமலை மற்றும் ஹந்தல சிங்கம் கழகங்கள் இணைந்து 2023 மார்ச் 05 ஆம் திகதி திருகோணமலை, அபேபுர சமூக சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்துற்கு ஆதரவளிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
07 Mar 2023
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.
05 Mar 2023
வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ‘INS Sukanya’ கப்பல் இலங்கை விட்டுச் சென்றது
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று (2023 மார்ச் 01) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவுடன் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டுச் செல்கிறது. மேலும் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலுக்கு வழக்கமான பிரியாவிடை வழங்கப்பட்டது.
02 Mar 2023
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார்
28 Feb 2023
கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 13 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இந்த படையணியின் எட்டாவது (08) ஆட்சேர்ப்பில் சேர்ந்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஒன்பது (09) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரொஹான் திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி கடற்படை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
28 Feb 2023
இந்திய கடற்படையின் ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 பிப்ரவரி 27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
27 Feb 2023
கடற்படையின் செயற்பாட்டுத் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கடற்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் வடமத்திய கடற்படைக் கட்டளையின் மன்னார் வெடித்தலதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை இன்று (2023 பிப்ரவரி 26,) வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
26 Feb 2023
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி (Admiral Muhammad Amjad Khan Niazi) இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி இன்று (2023 பிப்ரவரி 25,) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
25 Feb 2023