நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சாதூவை கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களால் முந்தம்பிட்டி, பெரியாறு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 13) கைது செய்யப்பட்டனர்.

14 Sep 2016

கடற்படையினால் மொனராகலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை கஹகுருல்லன்பெலஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் மக்களின் உபயோகத்தித்காக ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அங்கு கடற்படையினர் நிறுவியுள்ளனர்.

14 Sep 2016

வெளிச்செல்லும் விமானப்படை தளபதி, கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

வெளிச்செல்லும் விமானப்படை தளபதி எயார் மாஷல் ககன் புலத்சிங்ஹல அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 13) சந்தித்தார்.

13 Sep 2016

‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

செவனகல பந்தய திடலில் செப்டம்பர் 11 ம் திகதி நடைபெற்ற ‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ மோட்டார் சைக்கில் போட்டியில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய மோட்டார் சைக்கில் வீரர்கள் பல வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.

13 Sep 2016

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்பு
 

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்கள் உட்பட கரையோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு வீரர்கள் ஒன்றிணைந்து நேற்று (செப்டம்பர் 12) மீட்டனர்.

13 Sep 2016

கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயத்திட்கு தளபாடம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
 

பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயம், வடமேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல அவர்களின் பணிப்பின் பேரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

12 Sep 2016

‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியில் கடற்படைக்கு இரண்டாம் இடம்
 

பாதுகாப்பு படையினரின் பாடல் திறமைகளை வெளிக்காட்டு முகமாக பாதுகாப்பு அமைச்சினால் நடாத்தப்படும் ‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியின் இறுதி நிகழ்ச்சி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று மாலை (செப்டம்பர் 11) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

12 Sep 2016

‘நீர்காகம் தாக்குதல் 2016’ திருகோணமலை டொக்யாடில்

இலங்கை பாதுகாப்பு படைகளின் வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சி, ‘நீர்காகம் தாக்குதல் 2016’ ன் ஒரு கட்டமாக கடற்படையின் கப்பல் படை பிரிவு, காலாட் பிரிவு, சிறப்பு படகு படை மற்றும் இராணுவ, விமானப்படை பிரிவுகளின் ஒன்றிணைந்த பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர் 10) திகதி திருகோணமலை கடற்படை டொக்யாடில் (கப்பல் பட்டறை) நிறைவு பெற்றது.

12 Sep 2016

நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி திருகோணமலையில் நிறைவு
 

இலங்கை கடற்படை சுழியோடிகலுக்காக அமெரிக்க கடற்படை வெடிபொருள் அகற்றும் பிரிவு 5 தினால் நடத்தப்பட்ட நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி 2016 செப்டம்பர் 08 ம் திகதி திருகோணமலையில் வைத்து நிறைவு

பெற்றது. ஆகஸ்ட் 22 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பயிட்சி இலங்கை கடற்படை சுழியோடிகலுக்கு தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் உதவியாக அமைந்தது.

11 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திகுட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களால் நிலாவெளி பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 9) கைது செய்யப்பட்டனர்.

10 Sep 2016