நிகழ்வு-செய்தி
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் பெரஹெர கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
2567 வது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாக கொண்டு நடைபெறுகின்ற புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் 2023 மே மாதம் 06 ஆம் திகதி இரவு பெரஹெர ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் அனுநாயக்க வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அறிவுரைப்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கட்டளைப்படி கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வண்ணமயமாக நடத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்தது.
07 May 2023
சமய வழிபாட்டு முறைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடற்படையினர் ஸ்ரீ சம்புத்த ஜயந்தியின் 2567வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
2023 மே மாதம் 05 ஆம் திகதி ஈடுபட்ட 2567 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ், இலங்கை கடற்படை ஒவ்வொரு கடற்படை கட்டளையையும் உள்ளடக்கி பௌத்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது, மேலும், ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாகக் கொண்ட புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் அரச வெசாக் விழாவிற்கு பக்தியுடன் பங்களிப்பு வழங்கியது.
06 May 2023
இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, இன்று (2023 மே 02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
02 May 2023
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, கடற்படை கப்பல்துறைக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்க விருது வழங்கப்பட்டது
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை கடற்படை திருகோணமலை கடற்படைத் கப்பல்துறையில் சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட தங்க விருது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கௌரவ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
02 May 2023
‘வழங்கள் கருத்தரங்கு - 2023’ மற்றும் 07வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
‘வழங்கள் கருத்தரங்கு - 2023’ மற்றும் 07வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி மற்றும் இன்றய திகதி (2023 ஏப்ரல் 30) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் இந்த ‘வழங்கள் கருத்தரங்கின் பிரதம அதிதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்க அவர்கள் கழந்துகொண்டார்.
30 Apr 2023
கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது
இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவகத்தின் (Institute for Security Governance - ISG) வளங்களைக் கொண்டு கடற்படைத் தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவு பெற்றது.
29 Apr 2023
இலங்கையில் பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. Jean - Francois PACTET அவர்கள் உள்ளிட்ட குழுவொன்று 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன், குறித்த தூதரகத்தின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கும் 2023 ஏப்ரல் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
27 Apr 2023
நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கையில் ஆய்வு சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ள நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் தூதுக்குழு இன்று (2023 ஏப்ரல் 24) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
25 Apr 2023
கடற்படையினர் சியத தொலைக்காட்சியுடன் இணைந்து சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களை திருகோணமலை கடற்படை முகாமில் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
சியத தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு விழா - 2023' கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் 2023 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்றது.
23 Apr 2023
காலி உரையாடல் 2023 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது
2023 காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2023 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் வெளியிடப்பட்டது.
21 Apr 2023