நிகழ்வு-செய்தி
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன பதவியேற்பு
ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக 2023 ஜூன் 16 அன்று கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
17 Jun 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறக்கப்பட்டது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், அங்கு பயணிகள் முனையம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் திறந்து வைப்பு இன்று (2023 ஜூன் 16) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கௌரவ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
16 Jun 2023
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை ஆதரவு
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் பெருந்திரளான கிறிஸ்தவ பக்தர்களின் பங்குபற்றுதலுடன் 2023 ஜூன் 13 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.
14 Jun 2023
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கடற்படையினருக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. மேலும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜூன் 12) கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
13 Jun 2023
கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்திடமிருந்து விருதுகள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் கல்விப் பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய இரண்டு அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் சான்றிதழ்கள் மற்றும் பலகைகள் வழங்கி வைப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் மற்றும் பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தற்போதைய தலைவர் கொமடோர் ரவீந்திர திசேராவின் தலைமையில் 2023 ஜூன் 10 ஆம் திகதி கொழும்பு இலங்கை தொழில்சார் நிபுணத்துவ சங்கங்களின் நிறுவன அலுவலக வளாகத்தில் (Organization of Professional Associations of Sri Lanka) இடம்பெற்றது.
12 Jun 2023
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், தேடுதல் மற்றும் கைப்பற்றல் நுட்பங்கள் பற்றிய பிராந்திய பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் திருகோணமலை, விசேட படகுகள் படையணி தலைமையகத்தில் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் நுட்பங்கள் தொடர்பான பிராந்திய பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அதன் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2023 ஜூன் 09 ஆம் திகதி விசேட படகுகள் படையணியின் நிர்வாக அதிகாரி கமாண்டர் பிசிபிஏ லியனகே தலைமையில் திருகோணமலை மலிமா சோபர் தீவு உணவகத்தில் நடைபெற்றது.
11 Jun 2023
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடற்படையினர் சதுப்புநில கன்றுகள் நடும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
2023 ஜூன் 8 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, 'மாற்றும் பூமியின் பெருங்கடல்' என்ற தொனிப்பொருளில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ருவன் ரூபசேன தலைமையில் கடற்படையால் பானம களப்பு பகுதியில் சதுப்புநில கன்றுகள் நடுகை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
10 Jun 2023
ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியாளராக கடமைகளை பொறுப்பேற்றார்
ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியாளராக 2023 ஜூன் 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் அலுவலகத்தில் பதவியேற்றார்.
07 Jun 2023
ரியர் அட்மிரல் ரஞ்சன் மெதகொட கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ரஞ்சன் மெதகொட தனது புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கைக்கு இன்று (2023 ஜூன் 06) விடைபெற்றார்.
06 Jun 2023
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அவிஹாய் சஃப்ரானி Avihay Zafrany கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
05 Jun 2023