நிகழ்வு-செய்தி

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது மற்றும் 36வது உள்வாங்கல்களின் தொழில்நுட்பக் கிளைகளைச் சேர்ந்த இருபத்திமூன்று அதிகாரிகள் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டனர்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 ஆவது ஆட்சேர்ப்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 23 அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2023 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற பதவியேற்பு விழாவின் பின்னர் நிருவனங்களுக்கு சென்றனர். இந் நிகழ்வுக்காக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

01 Jul 2023

கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் மற்றும் கேடட் அதிகாரிகள் 67 பேர் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்களைப் பெற்றனர்

இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 65 வது கேடட் ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் முப்பத்தைந்து பேர் (35), தன்னார்வ கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் இருபத்தி ஒன்பது பேர் (29) மற்றும் பல்கலைக்கழக ஆணைகளை பெற்ற மூன்று (03) கேடட் அதிகாரிகள் உட்பட 67 பேருக்கு இன்று (2023 ஜூன் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

29 Jun 2023

கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, 2 பெண் அதிகாரிகள் மற்றும் 3 பெண் மாலுமிகள், அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்

இலங்கை கடற்படை வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் (02) மற்றும் மூன்று பெண் மாலுமிகள் (03) அடங்கிய முதல் பெண் கடற்படை பாராசூட் குழு 2023 ஜூன் 21 ஆம் திகதி அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் தமது அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

28 Jun 2023

கடற்படை மூலம் சதுப்புநில கன்றுகள் நடவு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தலைமையில், ஆயிரம் (1000) சதுப்புநில மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியொன்று லங்காபடுன உல்லுக்கலை களப்பு பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

27 Jun 2023

சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு வருகை

2023 ஜூன் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொன்டுள்ள சீன மக்கள் குடியரசு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மேஜர் ஜெனரல் Zhang Changsheng தலைமையிலான ஐம்பத்தாறு (56) அதிகாரிகள் கொண்ட குழு 2023 ஜூன் 23 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளதுடன் அங்கு குறித்த குழுவின் தலைவருக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

24 Jun 2023

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 23) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் புறப்படும் ‘IKAZUCHI (DD-107) கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு இணங்க பிரியாவிடை வழங்கினர்.

24 Jun 2023

ரியர் அட்மிரல் விஜித மாரப்பன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விஜித மாரப்பன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இருந்து இன்று (2023 ஜூன் 23) ஓய்வு பெற்றார்.

23 Jun 2023

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'IKAZUCHI (DD-107)' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

22 Jun 2023

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘INS Vagir’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 22) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க புறப்படும் ‘INS Vagir’ நீர்மூழ்கி கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.

22 Jun 2023

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்திய தூதுவராக கடமையாற்றும் திரு Maged Mosleh அவர்கள் இன்று (2023 ஜூன் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

21 Jun 2023