நிகழ்வு-செய்தி

இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் தலைமையில், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் கௌரவப் பணிப்பாளர் ராஜகீய பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்களை அடையாளமாக விநியோகிக்கும் நிகழ்வு 2023 ஜூலை 17 ஆம் திகதி வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.

18 Jul 2023

புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று (2023 ஜூலை 13) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

13 Jul 2023

உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றும் Vinod Kurain Jacob அவர்கள் இன்று (2023 ஜூலை 12) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

12 Jul 2023

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration - IOM), தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (National Anti- Human Trafficking Task Force – NAHTTF) உடன் இணைந்து மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து நடத்தப்பட்ட இராணுவ வீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2023 ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

06 Jul 2023

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது சப்தர் கான் (Colonel Muhammad Safdar Khan) இன்று (06 ஜூலை 2023) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

06 Jul 2023

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டம் மூலம் "கதிர்காமம் பாத யாத்திரை"க்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டன

2023 ஜூன் 10ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் யால லிங் துண பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் பக்தர்களின் குடி நீர் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

05 Jul 2023

இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் (Ali Faiz) அவர்கள் இன்று (2023 ஜூலை 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

05 Jul 2023

கடற்படை சேவைகளின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இன்று (2023 ஜூலை 04) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

04 Jul 2023

நிரந்தரமாக ஊனமுற்ற ஓய்வுபெற்ற சிரெஷ்ட மாலுமிக்கு கடற்படையால் மின்சார சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

குறிப்பிட்ட உடல்நிலை காரணமாக முற்றாக ஊனமுற்ற சிரேஷ்ட மாலுமி எம்.யு.எல். ஜயரத்னவுக்கு (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி கடற்படையால் வடிவமைக்கப்பட்ட மின்சார சக்கர நாற்காலியொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு எல்பிட்டிய பகுதியில் உள்ள மூத்த மாலுமியின் வீட்டில் இடம்பெற்றது.

04 Jul 2023

கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையில் திருகோணமலை தெற்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஜூலை 01 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட திருகோணமலை தெற்குப் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த பகுதியில் கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நலன்புரி வசதிகளை அவதானித்தார். மேலும் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, கால அவகாசம் மற்றும் சவால் முகாமைத்துவம் பற்றி குறித்து திருகோணமலை தெற்கு பிராந்திய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு விளக்கமளித்தார்.

02 Jul 2023