நிகழ்வு-செய்தி

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா பதவியேற்பு

ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 03) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

04 Sep 2023

இந்திய கடற்படைக் கப்பல் ‘INS Delhi’ தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 செப்டம்பர் 1 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் ‘INS Delhi’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 செப்டம்பர் 03) தீவை விட்டு வெளியேறியது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

03 Sep 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணை வேந்தராக 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார்.

02 Sep 2023

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சமன் பெரேரா பதவியேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சமன் பெரேரா இன்று (2023 செப்டம்பர் 01) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

01 Sep 2023

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்பு

ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 01) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

01 Sep 2023

இந்திய கடற்படையின் ‘INS Delhi’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Delhi’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

01 Sep 2023

ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

38 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 செப்டம்பர் 01) ஓய்வு பெற்றார்.

01 Sep 2023

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹராவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2023 ஆகஸ்ட் 31) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.

31 Aug 2023

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கொழும்பு ரோயல் கல்லூரியினால் பாராட்டு

கொழும்பு றோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (2023 ஆகஸ்ட் 31) கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

31 Aug 2023

ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் (Chrish Van Hollen) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (2023 ஆகஸ்ட் 30) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங் (Juli Chung ) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

30 Aug 2023