நிகழ்வு-செய்தி
07 வைத்திய அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது
இலங்கை நிரந்தர கடற்படையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஏழு (07) மருத்துவ அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் தலைமையில் இடம்பெற்றது.
01 Oct 2023
அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்ப்பு
2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium - ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். அங்கு, அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் துணைத் தளபதி, அட்மிரல் Lisa M. Franchetti, அமெரிக்காவின் கடலோர காவல்படையின் தளபதி, அட்மிரல் Linda L. Fagan, அமெரிக்காவின் பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் Samuel J. Paparo மற்றும் அமெரிக்க கடற்படைத் மத்திய கட்டளையின் தளபதி வைஸ் அட்மிரல் Brad Cooper உட்பட பிராந்திய மற்றும் பிராந்தியம் அல்லாத மாநிலங்களின் கடற்படைத் தலைவர்கள் மற்றும் கடலோரக் காவல் படைத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
26 Sep 2023
இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் காலி முகத்திடல் கரையோரத்தில் மரம் நடும் நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கப்பல் நிறுவனம் இணைந்து காலி முகத்துவார கடற்கரையை மையமாக் கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 செப்டம்பர் 23) மேற்கொன்டுள்ளனர்.
23 Sep 2023
இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது
2023 செப்டெம்பர் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் 'INS Nireekshak' கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2023 செப்டம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
22 Sep 2023
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பணிகள் அனைத்து கடற்படை கட்டளைகளும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
17 Sep 2023
இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS Nireekshak' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
14 Sep 2023
கடல்சார் பேரழிவுகளுக்கு பதிலளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடலொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது
கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடல் மற்றும் மீட்பு பணி மற்றும் கடலில் ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்கும் திறன் தொடர்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் கடற்படையின் துணைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 செப்டம்பர் 06 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடலொன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
12 Sep 2023
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்
டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் துறை மாற்றம் மூலம் பின்னடைவை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணி குழுவின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) பங்கேற்புடன் 2023 செப்டெம்பர் 07 ஆம் திகதி குறித்த பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் தொடங்கியதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
08 Sep 2023
விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணி கடற்படை தலைமையகத்தில் கூடியது
நாட்டில் விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
06 Sep 2023
இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் தொடங்கியது
இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி வெலிசர தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா தலைமையில் தொடங்கியது.
06 Sep 2023