நிகழ்வு-செய்தி

கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பல் சிகிச்சை முகாமின் இரண்டாவது கட்டம் மாத்தரை, தலஹிடியாகொட மற்றும் தேவாலேகம பகுதிகளில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் 2024 டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

05 Dec 2024

கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் ஜனசிரிகம கிராமம், ஹிகுருவெவகம கிராமம் , 21 கொலனியில் மேற்கு தக்க்ஷிலா கல்லுரி மற்றும் மஹகஸ்வெவ கல்லுரி ஆகியவற்றில் நிறுவப்பட்ட நான்கு (04) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

04 Dec 2024

கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படுகின்ற பல் சிகிச்சை முகாமின் முதல் கட்டம் 2024 நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கருவலகஸ்வெவ மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

04 Dec 2024

கடற்படை சமூக நலத் திட்டம் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வு தொடங்கியது

அனுராதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 2024 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படையால் திறந்து வைக்கப்பட்டன. அனுராதபுரம் நாச்சாதூவ முஸ்லிம் மகா வித்தியாலயம், மத்திய நுவர கம்பலாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகொல்லேவ பாலர் பாடசாலை மற்றும் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ரந்துவ மீனவர் சங்க மண்டபம் ஆகிய இடங்களில் இந்த புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் 31 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

03 Dec 2024

74 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2024 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2024 டிசம்பர் 02) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.

03 Dec 2024

கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை

இலங்கை ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 2024 நவம்பர் 22 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

22 Nov 2024

வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் மணில் மென்டிஸ் (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இன்று (2024 நவம்பர் 20) கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலரொன்று அணிவித்தார்.

20 Nov 2024

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாய பயிற்சியை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையினரால்; அவசரகால இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயம் ஏற்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டுப் பயிற்சி 19 நவம்பர் 2024 அன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

20 Nov 2024

USS Michael Murphy' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது

வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2024 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவையை பூர்த்தி செய்த பின்னர், இன்று (2024 நவம்பர் 17,) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், கடற்படையின் மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.

17 Nov 2024

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 நவம்பர் 17) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

17 Nov 2024