நிகழ்வு-செய்தி

இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் பகிர்வு நிலையான செயல்பாட்டு நடைமுறை பாடநெறி வெற்றிகரமாக முடிவடைந்தது

2024 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி வரை 05 நாட்களாக கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் பகிர்வுக்கான தெற்காசிய பாடநெறி (Indian Ocean Regional Information Sharing -IORIS) நிலையான செயல்பாட்டு நடைமுறை பற்றிய (Standard operation procedure- SOP) தெற்காசிய பாடநெறி வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

10 Feb 2024

மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் (Chief of Defence Force of Maldives National Defence Force (MNDF) Lieutenant General Abdul Raheem Abdul Latheef) இன்று (08 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

08 Feb 2024

இந்தியாவில் செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள செனகல் தூதரகத்தின் இராணுவ, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Abdoulaye TRAORE இன்று (2024 பிப்ரவரி 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

07 Feb 2024

மதவாச்சி பிரதேச பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படையின் சமூக சேவையாக, அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி பிரதேசத்தில் அ/புல்எலிய வித்தியாலயம், அ/துலாவெல்லிய வித்தியாலயம் மற்றும் ரம்பேவ கினிகடுவெவ வித்தியாலயம் ஆகியவற்றில் கடற்படை திறன்கள், உழைப்பு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பரோபகாரரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் 2024 பிப்ரவரி 05 ஆம் திகதி குறித்தப் பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டது.

07 Feb 2024

இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறியின் Colonel Anand Bajpai தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

05 Feb 2024

இந்தியாவில் ஜெர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

05 Feb 2024

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 76 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது

"புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2024 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரி கேப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

04 Feb 2024

76 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்பு

76 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (2024 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மற்றும் தாய்லாந்து பிரதமர் திரு. ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அவர்களின் கௌரவமான பங்கேற்புடன் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2024

ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 27) ஓய்வு பெற்றார்.

27 Jan 2024

02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய லொத்தர் சபையினால் கடற்படைக்கு நிதி பங்களிப்பு

தேசிய லொத்தர் சபையின் தளபதி கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன அவர்கள் 02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான காசோலையை 2024 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் கையளித்தார்.

25 Jan 2024