நிகழ்வு-செய்தி
காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான கடமைகள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதைக்கான கடமைகள் கடற்படையிடமிருந்து விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன
கொழும்பு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுதல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை 2024 மார்ச் 31 மற்றும் இன்று (2024 ஏப்ரல் 01) இலங்கை கடற்படை மூலம் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
01 Apr 2024
மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு மின்சார சக்கர நாற்காலிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன
மனிதாபிமான நடவடிக்கையில் பங்களித்து கால்களை இழந்த கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் மேலும் மூன்று கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் மின்சார சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஓயாமடுவ கடற்படை அதிகாரிகள் ஓய்வு விடுதி வளாகத்தில் நடைபெற்றது.
23 Mar 2024
கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களினால் கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு ஊக்கமளிக்கும் உரையொன்று நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதற்கான விசேட ஊக்கமளிக்கும் உரையொன்று 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களின் சமயோசிதத்துடன் வெலிசர Wave N' Lake நிகழ்வு மண்டபத்தில் நடத்த கடற்படை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
21 Mar 2024
சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தினால் கடற்படைத் தளபதியை கௌரவிக்கப்பட்டது
சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தின் பழைய மாணவர்களில் ஒருவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகளின் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்திற்குரிய நாபிரித்தன் கடவல ஞானரத்ன தேரரின் தலைமையில் இன்று (17 மார்ச் 2024) சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
17 Mar 2024
கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக கண்டி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன
இலங்கைக் கடற்படையில் சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் 2024 மார்ச் மாதம் முதல் வாரத்தில் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் ‘Interact Club’ சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
11 Mar 2024
IORA தினம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது
IORA தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான இந்தியப் பெருங்கடல்' (Sustainable Indian Ocean for Future Generations) என்ற தொனிப்பொருளின் கீழ், காலி முகத்துவாரத்தில் கடல் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்காட்சியொன்று இன்று (2024 மார்ச் 10) ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
10 Mar 2024
இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண பதவியேற்பு
இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண இன்று (2024 பிப்ரவரி 20) இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக தொண்டர் கடற்படை தலைமையகத்தில் பதவியேற்றார்.
20 Feb 2024
இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முத்தரப்பு கடலோர காவல் கடற்படை பயிற்சி ‘EX – DOSTI – XVI’ இல் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டது
‘EX – DOSTI – XVI’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இதில் பங்கேற்பதற்காக இன்று (20 பெப்ரவரி 2024) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
20 Feb 2024
இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான (Indo- Pacific) பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. Marc ABENSOUR அவர்கள் இன்று (2024 பிப்ரவரி 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
19 Feb 2024
ஈரானிய கடற்படைக்கு சொந்தமான IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு தீவில் இருந்து புறப்பட்டுள்ளது
2024 பெப்ரவரி 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த ஈரானிய கடற்படையின் IRINS ‘Bushehr’ மற்றும் ‘Tonb’ ஆகிய கப்பல்கள் தனது உத்தியோகபூர்வ விஜயங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 பிப்ரவரி 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்படும் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி பிரியாவிடை வழங்கினர்.
19 Feb 2024