நிகழ்வு-செய்தி
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
08 May 2024
கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கான ஒரு நாள் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது
கடற்படையின் அனைத்துக் பிரிவுகளின் மூத்த மாலுமிகள் (Branch Head Sailors), நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டாளர்கள், சிரேஷ்ட கடற்படைத் தலைவர்கள், பயிற்சிப் பாடசாலைகளில் தலைமை பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பட்டறையொன்று 2024 மே 03 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
06 May 2024
ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 05) ஓய்வு பெற்றார்.
05 May 2024
ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
34 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 04) ஓய்வு பெற்றார்.
04 May 2024
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஏப்ரல் 23 ஆம் திகதி நாகதீப புராண ரஜமஹா விகாரைக்கு மரியாதை செலுத்தினார்.
24 Apr 2024
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில் இடம்பெற்றது
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்கு (Seminar on India - Sri Lanka Defence Co-Operation) 2024 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகல்விள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
12 Apr 2024
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பதவியேற்பு
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இன்று (2024 ஏப்ரல் 08) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
09 Apr 2024
கடற்படையின் இரத்த தான திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி யொன்று 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
07 Apr 2024
கொமடோர் சனத் பிடிகல கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கொமடோர் சனத் பிடிகல இன்று (2024 ஏப்ரல் 02) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடற்படை காலாட்படை தளபதி அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
02 Apr 2024
புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்
இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேஷபந்து தென்னகோன் அவர்கள் இன்று (2024 ஏப்ரல் 01) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
01 Apr 2024