நிகழ்வு-செய்தி
தியவன்னா வெசாக் வலயத்தின் 3வது நாள் கடற்படைத் தளபதி தலைமையில் ஆரம்பமானது
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திவவன்னா வெசாக் வலயத்தின் மூன்றாம் நாளை வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2024 மே 25 ஆம் திகதி ஆரம்பமானது.
26 May 2024
சமய பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படை வெசாக் பண்டிகையை கொண்டாடுகிறது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படையினர் 2024 மே 23 ஆம் திகதி வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தளை தர்மராஜ பிரிவெனவில் பௌத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம், தியவண்ணா உயன வெசாக் வலயம், மஹர-கடவத்த வெசாக் வலயம், கொள்ளுப்பிட்டி வழுகாராமய வெசாக் வலயம் ஆகிய நிகழ்வுகளில் அவர்கள் பங்குபற்றினர்.
24 May 2024
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் கோபுரத்தை திறந்து வைக்கும் விழா 2024 மே 23 ஆம் திகதி கோட்டே ரஜமஹா விகாரை வளாகத்தில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் வணக்கத்துக்குரிய மகா சங்கரத்திரனின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது.
24 May 2024
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத 1289 கடற்படையினர் பொது மன்னிப்புக் காலத்தில் சரணடைந்துள்ளனர்
2024 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 2024 மே 20 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் விடுப்பு இன்றி பணிக்கு வராத ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு (1254) மாலுமிகள் கடற்படை முகாம்களுக்கும் முப்பத்தைந்து (35) வெளிநாட்டு மாலுமிகள் ஆன்லைன் அமைப்பு மூலமும் சரணடைந்துள்ளனர்.
24 May 2024
கொமடோர் ரவி குணசிங்க கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ரவி குணசிங்க இன்று (2024 மே 21,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
21 May 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகச் செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஏப்ரல் 20) கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
21 May 2024
ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 21) ஓய்வு பெற்றார்.
21 May 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி 2024 மே மாதம் 19 ம் திகதி அன்று தென்கிழக்கு கடற்படை கட்டளை கடற்படை வைத்தியசாலையில் நடைபெற்றது.
20 May 2024
பத்தரமுல்லை போர்வீரர் நினைவுத் தூபியை முன்னிட்டு கௌரவ பிரதமர் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்
19 May 2024
கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கான கட்டிடம் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட்டு வருகின்றது
கடற்படையின் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளினால் புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் மற்றும் அதன் பராமரிப்பு பொது பாதுகாப்பு அமைச்சரான திரு. திரன் அலஸ் தலைமையில் 2024மே மாதம் 18ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
19 May 2024