நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
34 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூன் 13) ஓய்வு பெற்றார்.
13 Jun 2024
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று கடற்படையால் நடத்தப்பட்டது
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படையினர் திருகோணமலை பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று 2024 ஜூன் 11 ஆம் திகதி மற்றும் இன்று (12 ஜூன் 2024) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
12 Jun 2024
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடற்படையினர் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
இன்று (2024 ஜூன் 08,) ஈடுபட்டுள்ள 'எழுந்து, ஆழ்ந்து சிந்தித்து கடல் சூழலைப் பாதுகாக்க எங்களுடன் இணையுங்கள்' என்ற தொனிப் பொருளுக்கு அமைய உலகப் பெருங்கடல் தினத்துடன் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஆறுகம்பே கடற்கரையில் நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
08 Jun 2024
கடற்படையின் இரத்த தானத் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 06 ஜூன் 2024 அன்று வட மத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
07 Jun 2024
கடற்படை சமூக பணித் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 1000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மற்றும் தேசிய லொத்தர் சபையின் நிதி பங்களிப்புடன், கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட 1,000 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (2024 ஜூன் 05) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
05 Jun 2024
இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது
கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவி மற்றும் வைத்தியசாலை சேவை சங்கத்தின் தலைவர் ராஜகீய பண்டித பூஜ்ய ராஜ்வெல்லே சுபூதி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட வைத்தியசாலை உபகரணங்களினால் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் 2024 ஜூன் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
04 Jun 2024
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான முதலாவது சந்திப்பு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது
இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமுடன் (National Nuclear Security Administration of United State of America) 2024 பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கையின் எல்லைகளில் சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வது, ஆட்கடத்தலைக் கண்டறிதல் மற்றும் கைது செய்வதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டது இதன் அடிப்படை நோக்கம் குறித்து விவாதிப்பதற்கான இரண்டு நாள் கூட்டம் 2024 ஜூன் 03, ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் தொடங்கியது.
04 Jun 2024
கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் புத்திக லியங்கமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
ரியர் அட்மிரல் புத்திக லியனகம இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக இன்று (03 ஜூன் 2024) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் பயிற்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
03 Jun 2024
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் ரொஹான் ஜோசப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 40வது கட்டளை அதிகாரியாக கொமடோர் ரொஹான் ஜோசப் 2024 மே 30 ஆம் திகதி பதவியேற்றார்.
30 May 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 மே 29,) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
29 May 2024