நிகழ்வு-செய்தி
கடற்படை சேவா வனிதா பிரிவு சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது
மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.
09 Mar 2021
கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்தஹிரு சேய மற்றும் மிஹிந்து மகா சேயவின் கட்டுமான மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்
பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன் 2021 மார்ச் 06 அன்று அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளை ஆய்வு செய்து, மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கும் நிகழ்வுக்காக கழந்து கொண்டார்.
07 Mar 2021
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, இந்திய கடற்படையுடன் இணைந்து வான்வழி கண்காணிப்பு பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை, இந்திய கடற்படையின் டோர்னியர் விமானமொன்று (Dornier Aircraft) மூலம் வான்வழி கண்காணிப்பு பயிற்சி நடவடிக்கையொன்று இலங்கையின் தென் கடல் பகுதியில் 2021 மார்ச் 02 முதல் 05 வரை நடத்தியது.
06 Mar 2021
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி
மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
06 Mar 2021
இந்திய விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பாதூரியா (Rakesh Kumar Singh Bhadauria) இன்று (2021 மார்ச் 4) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
04 Mar 2021
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது
இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.
01 Mar 2021
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான கப்பலொன்று ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான "செடொகிரி” (Setogiri) எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
26 Feb 2021
கடற்படை பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலைக்கு நூலக கட்டிடம்
கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
26 Feb 2021
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி திறக்கப்பட்டது
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே 2021 பிப்ரவரி 24 அன்று திறந்து வைத்தார்.
26 Feb 2021
கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 44 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்
சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 44 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2021 பிப்ரவரி 25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.
25 Feb 2021


