நிகழ்வு-செய்தி

இலங்கையின் இத்தாலிய தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையின் இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (2025 பெப்ரவரி 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

07 Feb 2025

"அமான் - 2025" பலதரப்பு பயிற்சி ஆரம்பமாகிறது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு பயிற்சியான AMAN-2025 இன் தொடக்க விழா இன்று (2025 பெப்ரவரி 07) பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் தளபதி மற்றும் ஏனைய கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

07 Feb 2025

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான ‘ANTONIO MARCEGLIA’ வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின் புறப்பட்டது

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இத்தாலிய கடற்படையின் 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இலங்கை கடற்படை கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 07) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்

07 Feb 2025

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் YUKI YOKOHARI, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 07 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

07 Feb 2025

கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்தார்.

06 Feb 2025

க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பேர ஏரியை மறுசீரமைப்பதற்கு கடற்படையின் பங்களிப்பு

"வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்பாட்டில் பேர ஏரியை மாற்றுவதற்கான பூர்வாங்க செயற்திட்டம் இன்று (2025 பெப்ரவரி 06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்படை படகுகள் மற்றும் உழைப்பையும் வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.

06 Feb 2025

இந்தியாவில் உள்ள நெமீபியா உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நெமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும், இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயற்படும் கெப்டன் Lisias Kondjeni Kangandjela, இன்று (2025 பெப்ரவரி 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

06 Feb 2025

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ‘KRI DIPONEGORO - 365’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 பெப்ரவரி 04 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் ‘KRI DIPONEGORO - 365’ போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 05) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

05 Feb 2025

Royal Australian Naval Academy இல் நீரியல் அளவீட்டு பாடநெறியில் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதை கடற்படை வீர்ர் ஆர்பிஜி சிந்தக வென்றார்

Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.

05 Feb 2025

இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான ‘ANTONIO MARCEGLIA’ என்றபோர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான ‘ANTONIO MARCEGLIA’ என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 05) அதிகாலை வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

05 Feb 2025