நிகழ்வு-செய்தி
தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்
கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூன் 10 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
11 Jun 2020
‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு பல முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டன. அதன்படி, இந்த நன்கொடை 2020 ஜூன் 10 அன்று கடற்படை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
11 Jun 2020
பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் 2020 ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.
10 Jun 2020
சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை, கும்புருபிட்டி மற்றும் எரக்கண்டி கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் 2020 ஜுன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 45 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 45 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 09 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
10 Jun 2020
டைனமைட் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நபரொருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் ஒருங்கிணைந்து, 2020 ஜூன் 08 ஆம் திகதி, யாழ்ப்பாணம் காகத்தீவ் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டைனமைட்டைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களைக் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
09 Jun 2020
அழகிய கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம் கடற்கரை மையமாகக் கொண்டு இன்று (2020 ஜூன் 09) மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.
09 Jun 2020
விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 06 இந்தியர்கள் கடற்படையால் கைது
செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் மற்றும் விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 6 இந்திய நாட்டினரை யாழ்ப்பாணம் குரிகாட்டுவான் இறங்குதுறையில் இலங்கை கடற்படை 2020 ஜூன் 8 ஆம் திகதி கைது செய்தது.
09 Jun 2020
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் கடற்படையால் கைது
புல்மூட்டை, ஜின்னபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் 2020 ஜூன் 08 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
09 Jun 2020
மேலும் 16 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 16 நபர்கள் 2020 ஜூன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
09 Jun 2020