நிகழ்வு-செய்தி
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாய பயிற்சியை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்
இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயம் ஏற்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியொன்று 2024 செப்டெம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
27 Sep 2024
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரின் பதவியேற்பு நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான திரு. அனுர குமார திஸாநாயக்க அவர்கள் 2024 செப்டம்பர் 23 முதல் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை (ஓய்வு) நியமித்தார். அவருடைய கடமைகளை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
25 Sep 2024
கடற்படையினரால் நவீனமயமாக்கப்பட்ட "நெடுந்தாரகை" பயணிகள் போக்குவரத்துக் கப்பல் இயக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தின், நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஜெட்டி இடையிலான பயணிகள் போக்குவரத்து வசதிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்ட 'நெடுந்தாரகை' என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல் கடற்படையினரால் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
20 Sep 2024
இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
பிரான்சில் கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தில் புதிய கல்வி இயக்குனர் (French Director of studies of the Regional Center for Maritime Studies) லெப்டினன்ட் கமாண்டர் Carine BUZAUD அறிமுகப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் கௌரவ Marie-Noëlle Duris அவர்கள் இன்று (2024 செப்டம்பர் 19) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
19 Sep 2024
வெருகல் ஆறு வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் வருடாந்த மகோட்சவ திருவிழாவை நடத்துவதற்கு கடற்படை உதவியது
திருகோணமலை, வெருகல் ஆறு, வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் 14 நாள் வருடாந்த மகோட்சவ திருவிழாவை 2024 செப்டெம்பர் 18 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், வெருகல் ஆறு ஆற்றங்கரையோரம் இடம்பெற்ற யாக பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பெருந்தொகையான பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடற்படையினர் உயிர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டனர்.
19 Sep 2024
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகடமியின் அதிகாரிகள் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் ஆயுதப்படைகளின் பாடநெறி - 2024 இல் கல்வி பயிலும் இருபத்தொரு (21) மாணவ அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழிய உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் (2024 செப்டம்பர் 18) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன் அங்கு, பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Mohammad Shaheenul Haque மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
18 Sep 2024
விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த 32 கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டது
கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் இருபத்தி எட்டாவது (28) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் இருபத்தி எட்டு (28) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.
15 Sep 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 செப்டம்பர் 14,) வட மத்திய கடற்படை கட்டளை தலைமை வளாகத்தில் இடம்பெற்றது.
14 Sep 2024
சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படையினரால், 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, காலி தேவா மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
14 Sep 2024
ரியர் அட்மிரல் பூஜித விதான கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்
36 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பூஜித விதான இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 செப்டம்பர் 13) ஓய்வு பெற்றார்.
13 Sep 2024