நிகழ்வு-செய்தி

கடற்படையினால் வணக்கத்திற்குரிய பிக்குகளுக்காக விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சையானது வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக, இலங்கை அமரபுர மகா சங்க சபையுடன் இணைந்து வணக்கத்துக்குரிய பிக்குகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் பல் வைத்திய சிகிச்சையானது 2025 பெப்ரவரி 28 அன்று பன்னிப்பிட்டிய ஸ்ரீ தேவ்ரம் மகா விகாரையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

02 Mar 2025

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கை கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ் குடாநாட்டின் கச்சத்தீவில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவானது 2025 மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

01 Mar 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

01 Mar 2025

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ மற்றும் கலாநிதி பெரகும் ஓவிடிகல அவர்களினதும் பங்களிப்புடன், மொனராகலை கல்வி வலயத்தின் வெஹெரயாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட 1085 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

28 Feb 2025

கடற்படைத் தளபதி மற்றும் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொட ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 பெப்ரவரி 28,) உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கொழும்பு, எதுல்கோட்டையில் வைத்து அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.

28 Feb 2025

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் திஸ்ஸமஹாராம ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்பு மற்றும் பொருயியளாலர் திரு. புத்தி மங்கல அவர்களின் முதலீட்டினால் ஹம்பாந்தோட்டை கல்வி வலயத்தின் திஸ்ஸமஹாராம பிரிவில் உள்ள ஸ்ரீ தேவானந்தா தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட 1084 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

28 Feb 2025

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கும் திருத்துவதற்கும் கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டது.

27 Feb 2025

ஜனாதிபதி மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

26 Feb 2025

பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் கடற்படை தளபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்

பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவரான வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கான்சன பானகொட நியமிக்கப்பட்டார். கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் அந்தக் கல்லூரிகளின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

26 Feb 2025

"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டம்

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மத்திய ஆகிய கடற்படை கட்டளைகளினால் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம் 2025 பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளும் கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டமொன்றை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.

24 Feb 2025