நிகழ்வு-செய்தி

நல்லெண்ண வருகைக்காக தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.

15 Apr 2026