இலங்கையின் பெருமைமிக்க 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களை செலுத்தியது

இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவிலிருந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சயுரவின் கட்டளை அதிகாரி கெப்டன் கொன்ட் அன்னதுகொடவின் தலைமையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.

துப்பாக்கி சூட்டு வணக்கத்தின் போது அதிகபட்சமாக 25 துப்பாக்கிச் சூடுகள் சுடப்படலாம், இது தேசத்திற்கு ஒரு வணக்கம், மேலும் துப்பாக்கி சூட்டு வணக்கங்களின் பாரம்பரியம் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் சுதந்திர தின துப்பாக்கி சூட்டு வணக்கம் 1948 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அரச கடற்படையால் நிகழ்த்தப்பட்டது. அதன்படி, இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி முதல், தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களைச் செலுத்தும் பாரம்பரியத்தை கடற்படை தொடர்கிறது, மேலும் 2021 முதல், தேசத்திற்கான 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் ஒரு கப்பலில் இருந்து தொடங்கியது.

அதன்படி, இலங்கை நாட்டின் பாரம்பரியத்திற்கு இணங்க, 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு இலங்கை கடற்படை கப்பலான சயுராவில் கடற்படையினரால் 25 துப்பாக்கி வேட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

துப்பாக்கி வணக்கத்தின் போது, கடற்படை பாரம்பரியமாக கப்பலின் கம்பங்களை கொடிகளில் இருந்து படிக்கப்படும் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி ‘25 Gun Salutes for the Nation’ என்ற செய்தியைப் படிக்க அலங்கரித்தது.

மேலும், 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை கப்பல்களான கஜபாகு மற்றும் விஜயபாகு, இலங்கை கடற்படை கப்பல் சயுரவுடன் இணைந்து, பாரம்பரியமாக கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காலி முகத்திடலுக்கு முன்னால் கடலில் நங்கூரமிடப்பட்டன.