முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையின் இரத்த தான திட்டம்

கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 23 அன்று முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையினரால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் ஒரு பகுதியான இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபயவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உன்னத சமூக சேவையின் வெற்றிக்கு பங்களிக்க முன்வந்தது.