ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB' கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB' இன்று (2026 ஜனவரி 22,) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள 'AL SEEB' என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் Hamad Bin Mohammed Aldarmaki தலைமை தாங்குகதுடன், குறித்த விஜயம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தொழில்முறை அறிவு பரிமாற்றம் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும்.
மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.


