அம்பன் கங்கை வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் செயல்பாட்டை கடற்படைத் தளபதி கண்காணித்தார்
சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை தொடங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை கடற்படைத் தளபதி 2026 ஜனவரி 10 அன்று கண்காணித்து, இவ் செயல்பாட்டை மிகவும் திறம்பட மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதன்படி, மாத்தளை, ரைத்தலாவையிலிருந்து அளுத்வெல வரை அம்பன்கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்க கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் கீழ், 2025 டிசம்பர் 24 முதல் ஜனவரி 11 வரை பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது (1850) பேரை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


