இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமானது நடாத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, 2025 டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணம், பலாலி அரசு தமிழ் கலப்புப் பாடசாலையில் கடற்படையால் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமானது வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவத் துறையால் வடக்கு மாகாண சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவமனையினால்; அவசர சிகிச்சை, வெளிநோயாளர் சிகிச்சை, குழந்தை மருத்துவ சிகிச்சை, இனப்பெருக்க சுகாதாரம், கண் சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, அறுவை சிகிச்சை, பொது நோய் சிகிச்சை, பல் சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் இரத்த பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டன.

மேலும், இந்த சமூக சேவைத் திட்டத்துடன் இணைந்து, அந்தப் பகுதியில் உள்ள இருநூறு (200) பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகிக்கப்பட்டன.