இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக 2025 டிசம்பர் 07 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளியில் ஒரு சமூக சுகாதார மருத்துவ மனையும், 2025 டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் நிபுணவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.