கடற்படைத் தளபதி INS VIKRANT உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2025 நவம்பர் 27,) சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க தீவுக்கு வந்த இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT க்கு உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
INS VIKRANT கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் Ashok Rao இருப்பதுடன், 2017 - 2020 வரை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
அங்கு, கெப்டன் Ashok Rao வினால் இலங்கை கடற்படைத் தளபதி INS VIKRANT கப்பலிற்கு கடற்படை மரபுகளின்படி அன்புடன் வரவேற்ற பிறகு, கடற்படைத் தளபதி கப்பலில் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடல்சார் பாதுகாப்பிற்கான வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்தும் “Sailing Strong Together” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


