கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நுவரகம கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடாவெவ புதிய கிராமத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு (01) நிலையமொன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படை இதுவரை 1139 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்களுக்காக கையளித்துள்ளது. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால், இப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீருக்கான தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும், மேலும் ஒரு நாளைக்கு சுமார் 10,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.



