நிகழ்வு-செய்தி

வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய கடற்படை தரையிறங்கும் படகு தீவிலிருந்து புறப்பட்டது

வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மூன்று இந்திய கடற்படை தரையிறங்கும் படகுகள் 2025 நவம்பர் 22 ஆம் திகதி தீவை வந்தடைந்தன, மேலும் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், கப்பல்கள் நவம்பர் 25 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டன. இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி கப்பல்களை வரவேற்று பிரியாவிடை அளித்தன.

25 Nov 2025

75 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் கொழும்பு கோட்டை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது

2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஆசிகளைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட தொடர் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 2025 நவம்பர் 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை, செத்தம் தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது.

25 Nov 2025

75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் ஒரு கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது.

25 Nov 2025

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பானது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை உள்ளடக்கிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்த கடற்படை தயாராக உள்ளதுடன், இதன் கீழ், “Sailing Strong Together” என்ற கருப்பொருள் நடைபெறும். சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பு இன்று 2025 நவம்பர் 24 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

25 Nov 2025

வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர், ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) 2025 நவம்பர் 19 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பொப்பி மலரொன்று அணிவித்தார்.

25 Nov 2025