வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய கடற்படை தரையிறங்கும் படகு தீவிலிருந்து புறப்பட்டது

வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மூன்று இந்திய கடற்படை தரையிறங்கும் படகுகள் 2025 நவம்பர் 22 ஆம் திகதி தீவை வந்தடைந்தன, மேலும் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், கப்பல்கள் நவம்பர் 25 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டன. இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி கப்பல்களை வரவேற்று பிரியாவிடை அளித்தன.

இவ்வாறு தீவுக்கு வந்த Landing Craft Utility-LCU கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே அந்த கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் நடைபெற்றதுடன், கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் இக் குழுவினர் பங்கேற்றனர்.

மேலும், தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுன், மேலும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் அந்தக் கப்பல்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.