75 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் கொழும்பு கோட்டை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது

2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஆசிகளைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட தொடர் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 2025 நவம்பர் 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை, செத்தம் தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது.

கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அஷ்-ஷேக் கலிலூர் ரஹ்மான் தேசபந்து மௌலவி (Moulavi Ash-Sheikh Kaleelur Rahman) அவர்களால் கொழும்பு கோட்டை ஜும்மா பள்ளிவாசலில் 2025 நவம்பர் 22 ஆம் திகதி இஸ்லாமிய சேவையின் மூலம் ஆசிகள் வழங்கப்பட்டதுடன், நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்கள், ஊனமுற்றோர், அனைத்து சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முழு கடற்படைக்கும் ஆசிகள் வழங்கப்பட்டன.