இந்திய கடற்படை போர்க்கப்பலான 'INS SUKANYA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 நவம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SUKANYA', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக பிரியாவிடை அளித்தனர்.
‘INS SUKANYA’ போர்க்கப்பலானது தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் அங்கத்தவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர், மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ சந்திப்பும் நடைபெற்றது.



























