முதலாம் உலகப் போருக்குப் பிறகு தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் உன்னத அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நினைவு தினம், 2025 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் இவ் நினைவேந்தல் நிகழ்வினை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.