உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை நடத்தியது
2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை 2025 நவம்பர் 14 ஆம் திகதி சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை ஏற்பாடு செய்தது.
இந்த சிறப்பு நீரிழிவு சிகிச்சையையில், கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடையே நீரிழிவு அபாயத்தை முன்கூட்டியே பரிசோதித்தல் மூலம் அடையாளம் காணவும், தடுக்கவும், நிர்வகிக்கவும், நீரிழிவு அபாயத்தில் உள்ள நபர்களை அடையாளம் காணவும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கவும் இவ் நிகழ்ச்சியின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.


