4வது துரித தாக்குதல் படகு படையில் இணைந்து தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையில் சேவையில் இருந்தபோது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 2025 நவம்பர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இதில் வீரமிக்க போர்வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட மூன்று (03) தசாப்தங்களாக தாய்நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்படை அளித்த தீர்க்கமான பங்களிப்பினுள், தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களின் ஒப்பற்ற பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.

இதேபோல், தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 4வது துரித தாக்குதல் படகு படை, அந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பல கட்டங்களின் கீழ் போர் வீரர் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

அதன்படி, பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட தீவைச் சுற்றியுள்ள கடல் வலயத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, இலங்கை கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிராக 4 வது துரித தாக்குதல் படகு படையால் மேற்கொள்ளப்பட்ட வீர நடவடிக்கைகளில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த வீர கடற்படை வீரர்களுக்கு, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மத சடங்குகளைச் செய்த பின்னர் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வோடு இணைந்து, கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையால், வீரமரணம் அடைந்த வீரதீரப் போர் வீரர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், போர் வீரர்களின் குடும்பங்கள் செய்த அசாதாரண தியாகத்தைப் பாராட்டுவதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.