கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வு - 2025 ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது

புத்தளம், கங்கேவாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற மூன்று (03) நாள் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது, கூட்டு நடைமுறைப் பயிற்சிகளைத் தொடர்ந்து 2025 நவம்பர் 14 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

“ All hands on deck” என்ற கருப்பொருளில் மூன்று (03) நாட்களாக நடைப்பெற்ற பயிற்சி அமர்வானது, கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகளை உள்ளடக்கியிருந்தது, மேலும் முதல் நாளில் அனர்த்த தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளித்தல் குறித்த விடயங்கள் விளக்கக்காட்சிகள் மூலம் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டு தத்துவார்த்த அறிவானது பரிமாறிக் கொள்ளப்பட்டது. மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வின் இரண்டாவது நாளில், தத்துவார்த்த அறிவு தொடர்பான நடைமுறை பயிற்சிகளுக்குத் தயாராவதற்காக ஒரு (Table Top Exercise - TTX) நடத்தப்பட்டது, அங்கு அனர்த்த தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் அனர்த்த நிலைமையின் போது உடனடியாக பதிலளித்தல் ஆகியவற்றிற்கான மூலோபாய அணுகுமுறைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் அறிவு பரிமாற்றிக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்தப் பயிற்சியின் இறுதி நாளில், நிலச்சரிவுகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் நிலைமைகளில் அனர்த்த தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் உடனடியாக பதிலளித்தல் முறைகள் குறித்த நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், அதற்காக நிறுவப்பட்ட பயிற்சி அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதுடன், முப்படைகள், காவல்துறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், தீயணைப்புப் படை மற்றும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடைமுறைப் பயிற்சியானது வெற்றிகரமாக நடத்தப்பட்து.

மேலும், இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியும் நடைமுறைப் பயிற்சிகளில் இணைந்ததுடன், பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு கடற்படையின் விரைவு அதிரடி படகுகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி தலைமையில் நடைபெற்றது.