கடற்படை சிறப்பு படகு படை அதன் 32 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படைபிரிவின் பெருமைமிக்க 32 வது ஆண்டு விழா, திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படைப்பிரிவு தலைமையகத்தில், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

1993 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கடற்படையின் சிறப்பு படகுப் படையின் 32 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடற்படை மரபுகளுக்கு இணங்க தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் நினைவுகூரப்பட்டு, படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் ஆய்வு பரிசோதனையும் நடத்தப்பட்டது.