கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 அக்டோபர் 31 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப ஆதரவுடன், சுகாதார அமைச்சின் முயற்சியுடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், கடற்படை 1138 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியுள்ளது. இவ்வாறு இயக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தின் மாணவர்களினதும் கிராமத்தில் வசிக்கும் ஏராளமான மக்களினதும் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும்.

மேலும், இலங்கை கடற்படையானது சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு தொடர்ந்து பங்களிக்கும்.