கடற்படைத் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 04வது பாடநெறிக்காக வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நான்காவது (04) தேசிய பாதுகாப்பு பாடநெறியில் பயிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ‘Role of Sri Lanka Navy in National Security’ என்ற தலைப்பில் 2025 நவம்பர் 03 ஆம் திகதி வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார். மேலும், அந்த சந்தர்ப்பத்தில், கடற்படைத் தளபதியை கௌரவிக்கும் வகையில் ‘Hall of Fame’ இல் கடற்படைத் தளபதியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
உலகின் எந்த நாட்டிலும் தேசிய பாதுகாப்பு படிப்புகளுக்கான மிக உயர்ந்த நிறுவனமாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு குறித்து கற்கும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு முப்படைத் தளபதிகள் விருந்தினர் சொற்பொழிவுகளை வழங்குவது ஒரு மரபாகும்.
அதன்படி, கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்கவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி, அந்தக் கல்லூரியில் நான்காவது (04) தேசிய பாதுகாப்பு பாடநெறியைப் பயின்று வரும் முப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ‘Role of Sri Lanka Navy in National Security’ என்ற தலைப்பு தொடர்பான விரிவுரையை நிகழ்த்தினார். இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் புவிசார் அரசியல் சூழல், அதனுடன் தொடர்புடைய பொருளாதார சவால்கள் மற்றும் அந்த சவால்களை நிர்வகிக்க தேசிய பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடற்படை முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகள் குறித்து கவனம் செலுத்தினார்.
அங்கு, அந்த நேரத்தில், இலங்கையின் மிக உயர்ந்த இராணுவக் கல்வி நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு பாடநெறி எண் 01 ஐ முடித்து கடற்படைத் தளபதி பதவி வரை பதவி உயர்வு பெற்றதன் மூலம் கல்லூரிக்கு வழங்கப்பட்ட கௌரவத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கடற்படைத் தளபதியின் பெயர் ‘Wall of Fame’ இல் சேர்க்கப்பட்டது.
மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


