2025 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை முதல் இடத்தை வென்றது

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில், இலங்கை கடற்படைக் கப்பலான 'சிக்ஷா' வில் 2025 அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டி நடைபெற்றதுடன், இதில் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்டளை முதலிடத்தைப் பிடித்தது.

ஆண்டுதோறும் கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டி போட்டித் தொடரை ஏற்பாடு செய்வதன் மூலம் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் நல்ல ஒழுக்கம், உயிர்வாழ்வு மற்றும் கட்டளைத் திறன்களை வளர்க்க கடற்படை நம்புகிறது.

இந்த ஆண்டு பன்னிரண்டாவது (12வது) முறையாக நடைபெற்ற கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில், கடற்படை தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் பயிற்சி கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது (09) அணிகளும், பெண் மாலுமிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு (01) அணி என்ற அடிப்படையில் பத்து (10) அணிகள் இதில் பங்கேற்றியது.

அதன்படி, நல்ல கட்டளையும் கட்டுப்பாடு மற்றும் கவர்ச்சிகரமான அணிவகுப்புப் பாணியை வெளிப்படுத்திய ஏவுகனைக் கட்டளை, 2025 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரின் முதலிடக் கோப்பையை வெல்ல முடிந்தது. அங்கு வட மத்திய கடற்படை கட்டளை இரண்டாவது இடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளை மூன்றாவது இடத்தையும் பிடித்ததுடன், போட்டியின் சிறந்த கட்டளை அதிகாரிக்கான கோப்பையை கடற்படை கட்டளையின் லெப்டினன்ட் ஆர்எம்பிபி ரத்நாயக்கவும், சிறந்த பயிற்சி வீரருக்கான கோப்பையை கடற்படை வீரரான டிஏஎஸ்எஸ் அத்தநாயக்கவும் பெற்றுக் கொண்டார்.

மேலும், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா, கடற்படை ஆயுத இயக்குநர் கொமடோர் துமிந்த ஹெட்டியாராச்சி, இலங்கை கடற்படை பயிற்சி கட்டளைத் தளபதி கெப்டன் லக்ஷ்மன் அமரசிங்க, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், அணிவகுப்புப் பயிற்றுனர்கள், இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அணிவகுப்புப் பயிற்றுனர்கள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.