இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில் மன்னார் பேசாலையில் மருத்துவ மற்றும் பல் மருத்து சிகிச்சைகள் நடத்தப்பட்டன
2025 டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 5 முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சித் தொடரை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரின் தொடக்கமாக, முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில், கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவத் துறைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சை இன்று (2025 அக்டோபர் 5) மன்னார் பேசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் வழிகாட்டுதலின் கீழ், முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே லயன்ஸ் கழகம் மற்றும் கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவத் துறைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த, இந்த சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சைகளில்; அவசர சிகிச்சை, வெளிநோயாளர் சிகிச்சை, குழந்தை மருத்துவ சிகிச்சை, இனப்பெருக்க சுகாதாரம், கண் சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, அறுவை சிகிச்சை, பொது நோய் சிகிச்சை, பல் சிகிச்சை, தொண்டை/காது/மூக்கு தொடர்பான சிகிச்சை, தோல் மருத்து சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை சிகிச்சை மற்றும் இரத்த பரிசோதனை வசதிகள் ஆகியவை நடமாடும் ஆய்வகங்கள் மூலம் வழங்கப்பட்டன.மேலும், பேசாலை மருத்துவமனைக்கு வணக்கத்திற்குரிய ரஜவெல்லே சுப்புத்தி தேரரின் பங்களிப்புடன் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது, மேலும், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பேசாலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதற்காக சமூக அக்கறையுடன் செயற்பட்ட அனைத்து அனுசரணை நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்துக்கொண்டனர்.
மேலும், கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடற்படை அதன் அங்கத்துவர்கள் உட்பட முழு கடற்படைக்கும் ஆசீர்வாதம் பெறுவதற்காக தொடர்ச்சியான சர்வமத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது, மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கும் கடற்படையின் சமூக சேவை பங்களிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வெளிநாட்டு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன் காலி முகத்திடலில் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு (International Fleet Review - IFR) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, கொழும்பு மற்றும் வெலிசரை மையமாகக் கொண்டு சர்வதேச உணவு நிகழ்ச்சி, கலாச்சார பரிமாற்றங்கள், வெளிநாட்டு கடற்படை இசைக்குழுக்களின் பங்கேற்புடன் இசைக்குழு நிகழ்ச்சிகள் (Band Show) மற்றும் நடைபவணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும் கடற்படை நம்புகிறது.