இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியின் அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதியை சந்தித்தனர்
இலங்கைக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பணியாளர் பாடநெறியைப் பயிலும் மாணவ அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட, மேஜர் ஜெனரல் Pawanpal Singh தலைமையிலான அதிகாரிகள் குழு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து, 2025 செப்டம்பர் 01ஆம் திகதி சந்தித்தனர்.
அதன்படி, இந்த அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்து, சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர், குறித்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதிக்கும் இந்தியப் பிரதிநிதிகளின் தலைவருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.
மேலும், இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் இலங்கை கடற்படையின் பங்கு குறித்த விரிவுரையில் பங்கேற்றதுடன், பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, செயல்பாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Captain M Anand) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.