இலங்கை ஆயுத சேவைகள் மருத்துவ மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முறை மேம்பாட்டு நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

இலங்கை ஆயுத சேவைகள் மருத்துவ மாணவர் சங்கம், Hemas Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Vision 8 Academy யுடன் இணைந்து ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் உள்ள மருத்துவ நிபுணர்களின் தொழில்முறை சிறப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நல்வாழ்வு மற்றும் தொழில்முறை மேம்பாடு குறித்த ஒரு நாள் பட்டறை, 2025 ஆகஸ்ட் 21 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள ‘அட்மிரல் சோமதிலக திசாநாயக்க’ ஆடிட்டோரியத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, இந்த ஒரு நாள் பாடநெறியில், முப்படைகள் மற்றும் காவல்துறையில் உள்ள மருத்துவ நிபுணர்களின் மன நலம் மற்றும் தொழில்முறை மேம்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதுடன், இலங்கை முப்படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 92 மருத்துவ வல்லுநர்கள், இலங்கை ஆயுத சேவைகள் மருத்துவ மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தப் பாடநெறியில் பங்கேற்றனர்.

மேலும், இலங்கை ஆயுத சேவைகள் மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றும் கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (டாக்டர்) ஜனக மாரம்பே மற்றும் இலங்கை ஆயுத சேவைகள் மருத்துவ மாணவர் சங்கத்தின் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.